குறுக்காக:
5. மற்ற ஜென்மம் முடிவடையாது (2)
6. தூக்கத்தைக் கெடுக்க ஒலியெழுப்பினாலும் கூரையின் மேல் நின்று கூவாது (6)
7. பெண் ஒரு நதிமூலம் தவிர்த்து வந்த தமிழ்பேசும் பகுதி (4)
8. புரவியைத் தொடர்ந்து திங்கள் தலைப்பட ஞாயிறு (3)
9. பாட்டாளி ருமேனியத் தலைவரைச் சிறைபிடிக்க உபகரணம் (3)
11. வாலிப வனிதையருடன் ஊர் சுற்று (3)
13. எரிந்த பிறகு 17 உடன் மிஞ்சுவது (4)
16. காண்பிப்பாயா? சவால் விடு (6)
17. ஒரு சுவையளி தனிமம் (2)
நெடுக்காக:
1. எண்ணத்தை விட்டு நீங்காமல் மெய்யொழித்துத் துறவாமல் குழம்பு (4)
2. பணம் சம்பாதிப்பதற்காக இஞ்சி காய அதன் முன்பே காலம் தொடங்கியது (5)
3. வையகம் வையகம் தொடங்க நோட்டம் (3)
4. அக்காளை இப்படிச் சொல்லலாம் (4)
10. அகன்ற வாலின்றி உரிச்சொல்லொன்றைக் கொண்ட விமானம் (5)
12. அது சென்றபின் சிதறிய அவர்களது விருத்திக்கு வாழ்த்து (4)
14. அருகே நூலின் ஏடு (4)
15. காற்றில் கரைந்து நீரில் கரையாதது (3)
வாஞ்சிநாதன்
ஏப்ரல் 2011 விடைகள்குறுக்காக: 5. வரி 6. சிம்மாசனம் 7. கடையெழு 8. கோதுமை 9. குந்தி 11. வாசுகி 13. கரிசல் 16. மாட்டுவண்டி 17. களை
நெடுக்காக: 1. திரிசடை 2. பூசிமெழுகு 3. ஏமாறு 4. சினந்து 10. திகட்டிய 12. சுருட்டு 14. சங்கம் 15. கூவம்
ஏப்ரல் 2011 புதிர் மன்னர்கள்
கே.ஆர். சந்தானம், வேளச்சேரி, சென்னை
லலிதா கிருஷ்ணன், சான்டா கிளாரா, கலி.
வைத்தியநாதன், சான்டா கிளாரா, கலி.
மற்றவர்கள்:
அம்ருதா பார்த்தசாரதி, அரும்பாக்கம், சென்னை; ஷீலா கோபாலசாமி, அமிர்தபுரி, கேரளா; ஸ்ரீனிவாச ராமானுஜம், ஹனோவர் பார்க், இல்.; வி. சந்திரசேகரன், கூபர்டினோ, கலி.; ஹரி பாலகிருஷ்ணன், ஆல்ஃபரெட்டா, ஜார்ஜியா; வி. வைத்யநாதன், கூபர்டினோ, கலி.; ஜி.கே. சங்கர், பெங்களூர்; சிங்காநல்லூர் கணேசன், கலி.