ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டு வரை தமிழ்ப் பாசுரங்களால் பக்தியில் மனதை லயிக்கச் செய்தவர்கள் பன்னிரு ஆழ்வார்கள். இவர்களுள் ஒரே பெண் ஆண்டாள் என்ற கோதை நாச்சியார். இவர் திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழி ஆகியவற்றை இயற்றியுள்ளார்.
கோதையின் கனவுகளை நம் கண் முன்னே நடனத்தில் காட்ட வருகிறார் கவிதா திருமலை. சிறு வயது முதலே விஷ்ணுவின் மீது அளவற்ற அன்பும் பக்தியும் கொண்டிருந்தால் கோதை. இளம் பெண்ணாக வளர வளர, அவள் மனதில் இருந்த அன்பு காதலாய் மலர்ந்து, திருமணம் என்றால் திருமாலுடன் மட்டுமே என்ற நிலையை அடைகிறது. அவளது தெய்வீகக் காதல் உணர்ச்சிகள் அனைத்தையும் கொட்டி இயற்றியது நாச்சியார் திருமொழி.
பரதக் கலையில் தேர்ச்சி பெற்றுள்ள கவிதா திருமலை அளிக்கவுள்ள 'கோதையின் கனவு' நிகழ்ச்சி, நாச்சியார் திருமொழியின் நடன வடிவாக்கம். லாஸ்யா நடனக் குழுவும், லிவர்மோர் இந்து கலாசார மையமும் இணைந்து வழங்கும் இந்த நிகழ்ச்சி, நாச்சியார் திருமொழியை நடன வடிவில் காணக் கிடைத்த ஓர் அரிய வாய்ப்பு.
நாள்: மார்ச் 5, 2006, ஞாயிறு நேரம்: மாலை 4 மணி இடம்: Cubberley Theater, Palo Alto நுழைவு: இலவசம் இணையத்தளம்: www.sripadam.com/Kavita/kodai.html |