ஜனவரி 23, 2011 அன்று ஆல்பரட்டா- கேட்ஸ் CMA தமிழ் பள்ளி குடியரசு தினம் கொண்டாடியது. இந்திய தேசியக் கொடி மற்றும் பெருந்தலைவர்களின் படங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன. பள்ளி மாணவ, மாணவிகள் இவற்றைக் கண்டு மகிழ்ந்தனர்.
அன்றைய தினத்தின் சிறப்பம்சம், குழந்தைகள் தேசியக் கொடியின் மூவண்ணத்தில் உடை அணிந்து வந்திருந்து தமது நாட்டுப்பற்றை வெளிப்படுத்தினர். இந்திய சுதந்திர தினம் பற்றி ஆசிரியர்கள் விளக்கினர். மழலைகள் தேசியக் கொடிக்கு வண்ணம் தீட்டி மகிழ்ந்தனர்.
தீபா சிவகுமார், கவிதா பத்தாலா ஆகிய இருவரும் தேசியக்கொடி தயார் செய்து, அனைத்து வகுப்புகளுக்கும் சென்று குழந்தைகளுக்கு வழங்கிப்1 புகைப்படம் எடுத்தனர்.
பள்ளி முதல்வர் சுந்தரி குமார், துணை முதல்வர் இராஜா வேணுகோபால், ஆசிரியர்கள் மற்றும் தமிழ்ப் பள்ளி கலைநிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அனிதா தங்கமணி ஆகியோர் ஒருங்கிணைந்து நமது சுதந்திர தினத்தைச் சிறப்பாகக் கொண்டாட வகை செய்தனர்.
ராஜி முத்து, GATS CMA தமிழ்ப் பள்ளி. ஜியார்ஜியா |