பாரதி தமிழ்ச் சங்கம்: பொங்கல் நிகழ்ச்சி 'அன்னபூர்ணா'
மார்ச் 18, 2011 அன்று பாரதி தமிழ்ச் சங்கம் பொங்கல் பண்டிகையை ஒட்டி, 'அன்னபூர்ணா' என்னும் அன்னதான நிகழ்ச்சியை நடத்தியது. சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியில் உள்ள பிற சமூகத்தினருடன் தொடர்பும் நல்லிணக்கமும் ஏற்படுத்தவும், சமூகநல நோக்குடனும் வீடற்ற எளியவர்களுக்கு ஒரு வேளை உணவு வழங்கப் பட்டது. இப்பகுதியில் செயல்படும் பிற இந்து அமைப்புகளும் இந்த நற்பணியில் கைகோத்தன. லோவ்ஸ் அண்ட் ஃபிஷஸ் அட் ஈஸ்ட்சைட் நெய்பர்ஹுட் சென்டர், 2150 ஆலும் ராக் அவின்யூ, சான் ஹோசே என்ற இடத்தில் அன்னதானம் நடைபெற்றது. வரும் நாட்களில் அன்னபூர்ணா நிகழ்ச்சிக்குப் பங்களிக்க விரும்புபவர்கள் கீழ்க்கண்டவர்களுடன் தொடர்பு கொள்ளலாம்:

நித்யவதி - 510-687-1950;
அருட்செல்வன் - 916-316-6954;
மின்னஞ்சல்: foodforguest@gmail.com

திருமலை ராஜன்,
ஃப்ரீமாண்ட், கலி.

© TamilOnline.com