நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம்: சித்திரைத் திருவிழா
ஏப்ரல் 30, 2011 அன்று பிரபல தமிழ் திரைப்பட பின்னணிப் பாடகர்கள் 'ஜூன் போனால்' புகழ் கிருஷ் மற்றும் கவிநிலா அனிதா கிருஷ்ணா பங்குபெறும் 'சித்திரைத் திருவிழா' என்னும் மாபெரும் இசை நிகழ்ச்சியை நியூஜெர்சி தமிழ்ச் சங்கம் நடத்த உள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த் சக்தி இசைக் குழுவினரும் நிகழ்ச்சியில் பங்கேற்க்கிறார்கள். திரைப்பட இயக்குனர் அருண் வைத்தியநாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார். நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் இந்த நிகழ்ச்சியில் வசூலாகும் தொகையில் ஒரு பகுதியைத் தமிழ்நாட்டை சேர்ந்த Gift a Future என்ற கல்வி தானத்தை குறிக்கோளாகக் கொண்ட தொண்டு நிறுவனத்துக்கு அளிக்க உள்ளது.

இடம் - Ridge Performing Arts Center at Ridge High School, 268 South Finley Avenue, Basking Ridge, NJ 07920
நாள் - ஏப்ரல் 30, சனிக்கிழமை
நேரம் - மாலை 5 முதல் 9 மணிவரை

மேலும் விவரங்கள் அறிய:
மின்னஞ்சல்- events@njtamilsangam.org
தொலைபேசி - 732-800-2336

பாலமுரளி கோதண்டராமன்,
பாஸ்கின்ரிட்ஜ், நியூ ஜெர்சி

© TamilOnline.com