ஏப்ரல் 23, 2011 அன்று சான்டியேகோ தமிழ்ச் சங்கம், தமிழ்ப் புத்தாண்டை 'இளமை 2011' என்ற பல்சுவை நிகழ்ச்சியோடு வரவேற்கிறது. தம்பதியர்களுக்காக 'நீ பாதி நான் பாதி', அறிவுத்திறனைப் பரிசோதிக்கும் 'ஜேப்pa(r)dy', இசைத் திறமையை வெளிப்படுத்த 'இசை MA மணி', ஆட்டத் திறமையைச் சோதிக்கும் ' நான் ஆட ஸ்டேஜ் ஆட', நகைச்சுவைத் திறமையை வெளிப்படுத்த 'கிச்சு கிச்சு' எனப் பல புதுமையான, தனித்துவமான நிகழ்ச்சிகளை வடிவமைத்துள்ளது. 16050 4S Ranch Parkway, San Diego, CA 92127 என்ற இடத்திலுள்ள அரங்கத்தில் நிகழ்ச்சி நடைபெறும்.
சான் டியேகோ தமிழ்ச்சங்க உறுப்பினர்களுக்கு அனுமதி இலவசம். பிறருக்குக் கட்டணம் $5. மேலும் தகவலறிய: www.facebook.com/sdtamil, www.sdts.org
செய்திக்குறிப்பிலிருந்து |