மின்சாரம்


மாணவர் பிரச்சனையை மையமாக வைத்து, மாணவர் சக்தியை பின்புலமாகக் கொண்டு உருவாகியுள்ள படம் மின்சாரம். அரசியல், மாணவர் சக்தி, ரவுடிகள் அராஜகம், ஈவ் டீசிங் கொடுமை என எல்லாவற்றையும் பற்றிப் படம் பேசுகிறது. படத்தில் நாயகனாக யுவராஜ் நடிக்க, நாயகியாக மதுசந்தா நடிக்கிறார். இவர்களுடன் காதல் சுகுமார், பாலாசிங், கானா உலகநாதன், சுஜிபாலா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் இப்படத்தில் முதல்வராக நடித்திருக்கிறார் அத்துடன் பாடல் ஒன்றையும் எழுதியிருக்கிறார் என்பது கொசுறு தகவல். கதை, திரைக்கதை, வசனம் எழுதி என். செல்வகுமாரன் இயக்கியுள்ளார்.

அரவிந்த்

© TamilOnline.com