இது தேர்தல் காலம். புதிய கட்சிகள் உதயமாகும்; அதிருப்தியாளர்கள் கட்சி மாறுவர்; திரைப்பட நட்சத்திரங்கள் கட்சிகளில் நுழைவர்.
அ.தி.மு.க. அரசின் சலுகை மழைக்குத் திரையுலகமும் தப்பவில்லை. இரண்டு வருடங்களாக அறிவிக்கப் படாமல் இருந்த தமிழக அரசின் சினிமா விருதுகள் அறிவிக்கப்பட்டதும் இதில் ஒன்றாகவே கருதப்படுகிறது.
கார்த்திக் பார்வார்ட் பிளாக் கட்சியின் தமிழக தலைவராக பொறுப்பேற்றது பழைய செய்தி.
செந்தில், விஜயகுமார், முரளி, திரைப்பட இயக்குநர் உதயகுமார் என்று பல சினிமாப் பிரபலங்கள் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.வில் சேர்ந்துள்ளனர். நடிகை குஷ்புவும் அ.தி.மு.க.வில் இணையக்கூடும் என்று காற்றுவாக்கில் செய்தி வருகின்றது.
சினிமாக் கவர்ச்சி வாங்கு வங்கிகளைத் திசை திருப்புமா?
கேடிஸ்ரீ |