ஏப்ரல் 2011 : தென்றல் குறுக்கெழுத்துப் புதிர்
குறுக்காக:
5. கட்டு கட்டி அரசுக்கு வருவாயளி (2)
6. இந்த நாற்காலியுடன் வளையாத கழியும் கிடைக்கும் (6)
7. எண்ணிக்கையுடன் வள்ளல்கள் நாற்காலியை நீங்கு முன்பு சிலுப்பு (4)
8. சோற்றுக்கு ஆகாதென்றாலும் பசி நீக்கும் (3)
9. திருமணத்துக்கு முன்னர் ஒன்றும் பிறகு மூன்றும் பெற்றவள் (3)
11. கயிறாய்க் கடலுக்கு மேல் அல்லல்பட்டு, கணவனுக்காகக் கயிறை நழுவவிட்டவள் (3)
13. ஒருவகை மண் கல் உள்ளே எதிர்ப்புறமாய்ச் சாய் (4)
16. கடனுக்குமேல் கொடுப்பதுடன் மாண்டு திண்டாட வாகனம் (3,3)
17. அழகு பயிருக்குப் போட்டி (2)

நெடுக்காக:
1. பத்துத் தலையன் ஊரில் மூன்று பின்னல்காரி (4)
2. பூஜைக்குச் சிவந்த மென்மலர்த் தலைகளுடன் குழு மேலே வர மறை (2,3)
3. காளை மாட்டின் ஓசை கொண்டு மோசம் போ (3)
4. வெகுண்டு வற்றா நதியில் களையெடுத்த புனல் (4)
10. இனிமை தாங்காத வேர் அறுத்த அந்தணர் திடப்பொருள் விழுங்கினர் (5)
12. புகை தரும் துப்பாக்கியால் தாக்கி உள்ளே குருதி இடை (4)
14. அன்று தமிழ் வளர்த்து இன்று ஊழியர் நலங்காக்கும் அமைப்பு (4)
15. பெருங்குரலில் கத்த இறுதியாக வெள்ளம் சென்னையில் பாய்கிறது (3)

வாஞ்சிநாதன்

மார்ச் 2011 விடைகள்

© TamilOnline.com