வடா பாவ்
தேவையான பொருட்கள்
கடலை மாவு - 2 கிண்ணம்
அரிசி மாவு - 2 மேசைக்கரண்டி
உருளைக்கிழங்கு - 1/4 கிலோ
பாவ் பன் - 10 அல்லது 12
கேரட் துருவியது - 1/4 கிண்ணம்
பீன்ஸ் (நறுக்கியது) - 1/4 கிண்ணம்
பட்டாணி - சிறிது
வெங்காயம் - 1/4 கிண்ணம்
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
மிளகாய் (நறுக்கியது) - 2 மேசைக் கரண்டி
கொத்துமல்லி - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
காரப் பொடி - 1 தேக்கரண்டி
எண்ணெய் - தாளிக்க
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை
உருளைக்கிழங்கை வேக விட்டு மசித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து மிளகாய், காரட், பீன்ஸ், பட்டாணி, வெங்காயம் போட்டு உப்பு சேர்த்து, உருளைக் கிழங்கு மசித்ததோடு சேர்த்து வதக்கி, இஞ்சி பூண்டு, கறிவேப்பிலை, கொத்துமல்லி போடவும். உருளைக் கிழங்குடன் கலந்து பிசைந்து காரப்பொடி போட்டு, உருட்டிய அரிசி, கடலைமாவை உப்புப் போட்டு பேஸ்ட் போலச் செய்து உருண்டையாய்த் தோய்த்து எண்ணெயில் பொரித்து எடுத்து 'பன்'னைச் சுட வைத்து அதற்குள் வைத்துச் சாப்பிடவும். புளிச்சட்னி, பூண்டு, வேர்க்கடலைச் சட்னியுடன் சேர்த்துச் சாப்பிட மிகச் சுவையாக இருக்கும்.

தங்கம் ராமசாமி

© TamilOnline.com