ரைஸ் கிச்சு
தேவையான பொருட்கள்
பச்சரிசி உடைசல் - 1 கிண்ணம்
துவரம் பருப்பு - 1 மேசைக்கரண்டி
கடலைப்பருப்பு - 1 மேசைக்கரண்டி
நறுக்கிய பச்சை மிளகாய் - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1/4 தேக்கரண்டி
தேங்காய்த் துருவல் - 1/4 கிண்ணம்
பெருங்காயம் - சிறிதளவு
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
வேர்க்கடலை - 1/4 கிண்ணம்
கொத்துமல்லி - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தாளிக்க

செய்முறை
அரிசி உடைசலைச் சிறிது எண்ணெய் விட்டுப் பிசறி வைக்கவும். துவரம் பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் சிறிது ஊறவைத்து அத்துடன் மிளகு, சீரகம் சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம், தாளித்து தேங்காய்த் துருவல் போட்டுச் சிவக்க வறுத்து 2 1/2 கிண்ணம் தண்ணீர் விட்டு மிளகாய், மிளகாய்த் தூள் போடவும். வேர்க்கடலையை வறுத்து அதனுடன் சேர்த்துக் கறிவேப்பிலை, கொத்துமல்லி, உப்பும் போட்டுக் கொதி வரும்போது அரிசி உடைசல், அரைத்த பருப்பு இவற்றைப் போட்டுக் கட்டி தட்டாமல் கிளறி எடுத்துச் சிறுசிறு உருண்டைகளாக உருட்டி ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். இதனை அரிசி மாவிலும் செய்யலாம்.

தங்கம் ராமசாமி

© TamilOnline.com