ஜெர்ஸி ரிதம்ஸ்
2004-ம் ஆண்டு துவக்கத்தில், நான்கு நண்பர்கள் தங்கள் இசையார்வத்திற்குத் தீனியாய் சனி ஞாயிறுகளில் இசைக்கத் துவங்கியதே ஜெர்ஸி ரிதத்தின் வித்து. இன்று இக்குழுவில் பதினைந்து கலைஞர்கள் இருக்கின்றனர். யாவரும் கணினி மற்றும் வணிகத்துறையில் பணிபுரிபவர்கள்.

ஜெர்ஸி ரிதம்ஸ் இசைக்குழு தமிழ்த் திரையிசையில் அதிக கவனம் செலுத்து கிறது. ஹிந்தி மற்றும் தெலுங்குப் பாடல்க இசைக்கவும் சளைப்பதில்லை.
ஜெர்ஸி ரிதம்ஸின் முதல் நிகழ்ச்சி மே 22, 2005 அன்று நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்காக நியூ ஜெர்சி பிரிட்ஜ் வாடரில் பாலாஜி கோவிலில் அரங்கேறியது. அரங்கு நிறைந்த நிகழ்ச்சி உற்சாகம் ஊட்டுவதாக அமைந்தது.

ஜனவரி 28, 2006 அன்று ஜெர்ஸி ரிதம்ஸ் பெரிய அளவிலான இன்னிசை நிகழ்ச்சியை நியூ ஜெர்சியிலுள்ள சாமர்செட்டில் நடத்தியது. அரங்கு நிறைந்த இந்த நிகழ்ச்சிக்குச் சற்றேறக் குறைய 900 பேர் வருகை தந்தது ஒரு பெரும் வெற்றியாகும். இந்நிகழ்ச்சியின் மூலம் ஈட்டியதில் ஒரு கணிசமான தொகையை PRATHAM எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்திற்கு வழங்கியது. PRATHAM இந்திய ஏழைக் குழந்தை களின் கல்விக்கு உதவிவரும் நிறுவனமாகும்.

வளர்ச்சியின் அடுத்த கட்டமாக, ஜெர்ஸி ரிதம்ஸ் தன்னை LLC நிறுவன மாகப் பதிவு செய்துள்ளது. வருடத்திற்கு மூன்று அல்லது நான்கு இன்னிசை நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு: www.jerseyrhythms.com

© TamilOnline.com