அழகர்சாமியின் குதிரை


'வெண்ணிலா கபடிகுழு', 'நான் மகான் அல்ல' போன்ற படங்களை இயக்கிய சுசீந்திரன் அடுத்து இயக்கி இருக்கும் படம் 'அழகர்சாமியின் குதிரை'. அப்புக்குட்டி என்பவர் கதாநாயகனாக நடிக்க, நாயகியாக சரண்யா மோகன் நடிக்கிறார். பிரபாகரன், சூரி, அருள்தாஸ், கிருஷ்ணமூர்த்தி, அழகன் தமிழ்மணி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். திடீரென்று காணாமல் போன தன் குதிரையை தேடிப் புறப்படும் ஒருவனின் கதை அழகர்சாமியின் குதிரை. கெளதம் வாசுதேவ் மேனன் படத்தைத் தயாரிக்கிறார். இசை இளையராஜா. இதற்காக ராஜா ஹங்கேரியிலிருந்து இசைக் குழுவினரை வரவழைத்திருக்கிறார் என்பது கொசுறு தகவல். கதை - பாஸ்கர் சக்தி.

அரவிந்த்

© TamilOnline.com