தெரியுமா?: பத்ம விருதுகள்
பாரத அரசின் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 13 பேர் பத்ம விபூஷண் விருதிற்கும், 31 பேர் பத்ம பூஷண் விருதிற்கும், 84 பேர் பத்மஸ்ரீ விருதிற்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாண்டு விருது பெறுபவர்களில் 31 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம், சி.வி.சந்திரசேகர், டாக்டர் சூர்யநாராயணன் ராமச்சந்திரன், சசி கபூர், வஹீதா ரெஹ்மான், தொழிலதிபர் கோபாலகிருஷ்ணன் போன்றோருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டுள்ளது. பத்மஸ்ரீ விருதுக்கு நடிகைகள் தபு, கஜோல், பாடகி உஷா உதுப், திரைப்பட இயக்குநர் கிரிஷ் காசரவள்ளி, கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ். லக்ஷ்மண், மல்யுத்த வீரர் சுஷீல் குமார், துப்பாக்கி சுடுதல் வீரர் ககன் நரங், நாட்டிய குரு எம்.கே. சரோஜா, தமிழறிஞர் ஔவை நடராசன், நடிகர் ஜெயராம், கர்நாடக இசைக்கலைஞர் எஸ்.ஆர். ஜானகிராமன், பொறியியல் அறிஞர் நாராயண்ராவ் ராகவேந்திரன், மெக்கா ரபீக் அகமது (வர்த்தகம்), கைலாசம் ராகவேந்திர ராவ் (வர்த்தகம்), டாக்டர் சிவபாதம் விட்டல் (மருத்துவம்), குஞ்சராணி தேவி, டாக்டர் மாதனூர் அகமது அலி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா, நடிகர் நாகேஸ்வர ராவ், முன்னாள் அட்டார்னி ஜெனரல் கே. பராசரன், தொழிலதிபர் அசீம் பிரேம்ஜி, பிரஜேஷ் மிஸ்ரா ஆகியோர் பத்ம விபூஷண் விருதைப் பெறுகின்றனர்.



© TamilOnline.com