தெரியுமா?: ரஹ்மானுக்கு கிரிஸ்டல் விருது
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு
உலக பொருளாதார அமைப்பின் சார்பில் கிரிஸ்டல் விருது வழங்கப்பட்டுள்ளது. ரஹ்மான் இசைத் துறையில் படைத்த சாதனைகளுக்காகவும், அவரது சமூக சேவைகளைப் பாராட்டியும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. ஸ்விட்சர்லாந்தின் தாவோஸ் நகரில் நடந்த உலகப் பொருளாதார அமைப்புக் கூட்ட நிகழ்ச்சியில் இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டது. ரஷ்ய ஜனாதிபதி மெட்வதேவ் மற்றும் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் தொழில் அதிபர்கள், கல்வியாளர்கள், மதத் தலைவர்கள் உட்பட 11 நாடுகளைச் சேர்ந்த 2500 பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். "மனித நேயம்தான் உலகில் இன்றைக்கு மிக அவசியத் தேவை. மனித நேயத்தை வளர்க்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுவேன். உலகின் மிக உயர்ந்த பெருமை இது. மகிழ்ச்சியாக உள்ளது" என்கிறார் விருது பற்றி ஏ.ஆர்.ரஹ்மான்.



© TamilOnline.com