தெரியுமா?: ஆன்லைன் இசைப் பயிற்சிக்கு சங்கர் மஹாதேவன் அகாடமி
அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் ஆன்லைனில் இசைப் பயிற்சி பெறுவதற்கு வசதி செய்யும் அகாடமி ஒன்றைப் பிரபல திரையிசை அமைப்பாளரும் பாடகருமான சங்கர் மஹாதேவன் தொடங்கியுள்ளார். வலைவழியே பயில்வதற்கான மென்பொருளை தருகிற Clood இந்த முயற்சியில் பங்கேற்கிறது. இதனை www.shankarmahadevanacademy.com என்ற சுட்டியில் அணுக முடியும்.

ஹிந்துஸ்தானி இசை, கர்நாடக இசை, நாட்டுப்புற இசை, பக்தியிசை எனப் பலதரப்பட்டவர்களின் தேவைக்கேற்பப் பலவகை இசை வகைகள் இந்த இணையதளம் வழியே கற்பிக்கப்படும். 'உயர்தரமான இந்தப் பயிற்சியை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்குச் சான்றிதழ்கள் தரப்படும்' என்று நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தப் பயிற்சியின் ஆதரமாக விளங்கும் தொழில்நுட்பம் 'OMBook' எனப்படும் ஆன்லைன் மியூசிக் புக் ஆகும். “இசை கற்பதை இது எளிதாக்குவதுடன் இனியதாகவும் ஆக்கும்” என்கிறார் அகாடமியின் சகநிறுவனர் ஸ்ரீதர் ரங்கநாதன்.



© TamilOnline.com