கணிதப் புதிர்கள்
1. இருபத்தொன்பதில் 29ஐக் கழித்தால் விடையாக 9 வரும். எப்படி?

2. 1 முதல் 9 வரை உள்ள எண்களை அதே வரிசையில் கூட்டியோ, கழித்தோ விடையாக 100 வரவழைக்க வேண்டும், முடியுமா?

3. அது ஒரு மூன்று இலக்க எண். அதை 2ஆல் வகுத்தால் மீதி 1 வருகிறது. 3ஆல் வகுத்தால் மீதி 2 வருகிறது. 4ல் வகுத்தால் மீதி 3 வருகிறது. 5ல் வகுத்தால் மீதி 4 வரும். 6ல் வகுத்தால் மீதி 5 வருகிறது. ஆனால் 7ல் வகுத்தால் மீதி ஏதும் இருப்பதில்லை. அந்த எண் எது?

4. a,b,c,d என்ற நான்கு எண்களின் கூட்டுத்தொகை 45. அந்த எண்களில் முதல் எண்ணுடன் 2ஐக் கூட்டினாலும், இரண்டாம் எண்ணிலிருந்து 2ஐக் கழித்தாலும், 3ம் எண்ணை 2ஆல் பெருக்கினாலும், நான்காம் எண்ணை 2ல் வகுத்தாலும் வரும் விடை சமமாக இருக்கிறது. அந்த நான்கு எண்கள் எவை?

5. அது ஒரு இரண்டு இலக்க எண். அதிலிருந்து 9ஐக் கழித்தால் அது அந்த எண்ணின் தலைகீழ் எண்ணாகும். அந்த எண் எது?

அரவிந்த்

விடைகள்

© TamilOnline.com