கூட்டுப் பொடி
தேவையான பொருட்கள்
கடலைப்பருப்பு - 1 கிண்ணம்
மிளகாய் - 1 கிண்ணம்
கொத்துமல்லி விதை - 1 கிண்ணம்
அரிசி - 1 தேக்கரண்டி
வெந்தயம் - 1 தேக்கரண்டி
தேங்காய்த் துருவல் - 1/2 கிண்ணம்
மிளகு - 2 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிதளவு

செய்முறை
மிளகாய், கொத்துமல்லி விதை, கடலைப்பருப்பு, மிளகு, அரிசி, வெந்தயம் எல்லாவற்றையும் தனித்தனியாகச் சிறிது எண்ணெய் விட்டுச் சிவக்க வறுத்துக் கொள்ளவும். தேங்காய்த் துருவலை வறுத்து பெருங்காயம் பொரித்து எல்லாவற்றையும் மிக்சியில் போட்டு நைசாக அரைத்து பாட்டிலில் வைத்துக் கொள்ளவும். புளி விட்டுச் செய்கிற எல்லா கூட்டுக்களுக்கும் போட்டுச் செய்யலாம்.

தங்கம் ராமசாமி,
ப்ரிட்ஜ் வாட்டர், நியூஜெர்ஸி

© TamilOnline.com