கறிமாப் பொடி
தேவையான பொருட்கள்
உளுத்தம் பருப்பு - 1/2 கிண்ணம்
மிளகு - 1/2 கிண்ணம்
அரிசி - 1/2 கிண்ணம்
கொத்துமல்லி விதை - 2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 கிண்ணம்

செய்முறை
வெறும் வாணலியில் உளுத்தம் பருப்பு, அரிசி, மிளகு கொத்துமல்லி விதை இவற்றைத் தனித்தனியாகச் சிவக்க வறுத்துக் கொண்டு சீரகத்துடன் சேர்த்து மிக்சியில் நொம்ப கொரகொரப்பாக அரைத்து பாட்டிலில் வைத்துக் கொள்ளவும். பயத்தம் பருப்பு கூட்டுக்களுக்கு செய்து இறக்கி வைக்கும்போது இதைப் போட்டு ஒரு கொதி விட்டு இறக்கி வைக்கவும். தேங்காய் வேண்டுமானால் துருவி அல்லது அரைத்துப் போடலாம். இந்தப் பொடியைத் தூவிக் கறி வதக்கினால், ஆஹா, அமர்க்களம் போங்கள்!

தங்கம் ராமசாமி,
ப்ரிட்ஜ் வாட்டர், நியூஜெர்ஸி

© TamilOnline.com