தேவையான பொருட்கள் மிளகாய் - 1 கிண்ணம் கொத்துமல்லி விதை - 2 கிண்ணம் மிளகு - 1 கிண்ணம் துவரம் பருப்பு - 1/2 கிண்ணம் சீரகம் - 1/2 கிண்ணம் மஞ்சள் தூள் - 2 தேக்கரண்டி
செய்முறை எண்ணெய் விட்டு மிளகாய், தனியாவை நன்கு வறுக்கவும். மிளகு, துவரம் பருப்பை வெறும் வாணலியில் வறுக்கவும். மிளகாயைத் தனியாக மிக்சியில் அரைக்கவும். மிளகையும் நைசாக அரைக்கவும். துவரம் பருப்பை அரைத்துச் சலித்து பச்சையாக சீரகத்தையும் பொடித்து எல்லாவற்றையும் ஒன்றாகப் போட்டு மஞ்சள் தூளும் சேர்த்துக் கலந்து விடவும். இது ருசியும் மணமும் மிக்க ரசப்பொடி.
தங்கம் ராமசாமி, ப்ரிட்ஜ் வாட்டர், நியூஜெர்ஸி |