தேவையான பொருட்கள் மிளகாய் - 2 கிண்ணம் கொத்துமல்லி விதை - 1 1/2 கிண்ணம் மிளகு - 1 கிண்ணம் சீரகம் - 2 தேக்கரண்டி கடலைப்பருப்பு - 1/2 கிண்ணம் துவரம் பருப்பு - 1/2 கிண்ணம் வெந்தயம் - 2 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு - 1/2 கிண்ணம் மஞ்சள் தூள் - 1/4 கிண்ணம்
செய்முறை மிளகாயையும் தனியாவையும் தனித்தனியே வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வறுக்கவும். பருப்புகளை எண்ணெய் இல்லாமல் சிவக்க வறுக்கவும். வெந்தயம், சீரகத்தையும் வெறும் வாணலியில் வறுத்து எல்லாவற்றையும் மிக்சியில் நைசாக அரைக்கவும். மிளகாய், தனியாவையும் நைசாக அரைத்து எல்லவற்றையும் ஒரு பேசினில் போட்டு மஞ்சள் தூள் சேர்த்து நன்றாகக் கலந்து வைத்து சாம்பார் செய்யலாம். இது மிகவும் சுவையான சாம்பாராக இருக்கும்.
தங்கம் ராமசாமி, ப்ரிட்ஜ் வாட்டர், நியூஜெர்ஸி |