ரசப்பொடி
தேவையான பொருட்கள்
மிளகாய்த் தூள் - 1 கிண்ணம்
கொத்துமல்லி விதைத் தூள் - 1 கிண்ணம்
துவரம் பருப்பு - 1/2 கிண்ணம்
மிளகுத்தூள் - 1/2 கிண்ணம்
சீரகத் தூள் - 1/2 கிண்ணம்
மஞ்சள் தூள் - 3 மேசைக்கரண்டி

செய்முறை
மிளகாய்த் தூள், கொத்துமல்லி விதைத் தூள், மிளகுப் பொடி, மஞ்சள் பொடி, சீரகப் பொடி எல்லாவற்றையும் ஒன்றாக ஒரு பாத்திரத்தில் போடவும். துவரம் பருப்பை வெறும் வாணலியில் வாசனை போக வறுத்து மிக்சியில் அரைத்துச் சலித்துப் பொடிகளுடன் நன்றாகக் கலக்கவும். ரசப்பொடி இதோ ரெடி!

தங்கம் ராமசாமி,
ப்ரிட்ஜ் வாட்டர், நியூஜெர்ஸி

© TamilOnline.com