மார்ச் 2011: தென்றல் குறுக்கெழுத்துப் புதிர்
குறுக்காக:
3. தமிழ்ராகத்தில் உள்குத்து செய்து பல உயிர்களைக் காப்பாற்றுதல் முக்கியமென்றார் வள்ளுவர் (5)
6. ரணதுங்க முதலில் இருக்கும் இலங்கைநகர் மொண்டெடுக்க உதவும் (4)
7. நடுத் தடம் இட்ட சங்குவாசியின் போக்கு (4)
8. முட்டை பலம் குலைந்த கை ஆசிரியர் கையெழுத்திருக்குமிடம் (6)
13. கங்கா கடைசி பல் காயச் சின்னம் சிதற கைதி பெற்றது (6)
14. மதங்களுக்கு எதிரானது என்று முந்நாளில் கருதப்பட்ட அறிவை மேம்படுத்தும் பணிபுரிபவர் (4)
15. மகாகவியிடம் குறைவான கூலிகேட்ட கண்ணன் (4)
16. பாதித் துயரம் இலாத குழப்பத்தில் நடக்கிற காரியம் இல்லை (5)

நெடுக்காக:
1. விஷ ஜந்து கரி உண்ண சமூகத்தின் முதிர்ந்த பண்பாடு (5)
2. இலையின் கீழும் சுவரின் மேலும் பூசப்படும் (5)
4. விரியா அணிகலன் முகத்தில் மெல்லிய மலர்ச்சி (4)
5. பேருந்து ரத்து தொடர்ந்து ஓடு (4)
9. மலையில் முடிதுறந்தோர் பெற்ற இனிப்பு (3)
10. நண்பன் கண் சிமிட்டாதவன் பெரும்போருக்குப் பகைவனுக்கு நாள் குறித்துதவியவன் (5)
11. புரட்டிய தோல் கன்றி மண்ணாகவில்லையெனில் பழங்காலம் என்பர் (2, 3)
12. மீதமான வள்ளல் இல்லாமல் காஞ்சி எரிய சிதைந்தது (4)
13. பழுத்த கந்தனின் முடிவைத் துறந்த மாற்றம் (4)

வாஞ்சிநாதன்

பிப்ரவரி 2011 விடைகள்

© TamilOnline.com