ஆல்ஃபரட்டா CMA தமிழ்ப் பள்ளி பொங்கல் விழா
ஜனவரி 16, 2011 அன்று ஆல்ஃபரட்டா-கேட்ஸ் CMA தமிழ் பள்ளியில் பொங்கல் தினம் அனுசரிக்கப்பட்டது. குழந்தைகள், ஆசிரியர்கள் அனைவரும் நமது தமிழ்ப் பாரம்பரிய உடையில் வந்ததனர். குழந்தைகளுக்குப் பொங்கல், மாட்டுப் பொங்கல், உழவர் தினம், காணும் பொங்கல் ஆகிய பண்டிகைகளைப் பற்றி ஆசிரியர்கள் விளக்கினர். குழந்தைகள் இவற்றைப் பற்றி ஆர்வத்துடன் கலந்துரையாடினர்.

குழந்தைகள் வரைந்த ஓவியங்கள், பெருந்தலைவர்கள் பற்றிய தொகுப்பு, செய்தித் தொகுப்பு முதலியவை பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. குழந்தைகளின் திறமை மற்றும் தமிழறிவை வெளிபடுத்தும் வகையில் அமைந்த இக்காட்சி பெற்றோர்களை வெகுவாகக் கவர்ந்தது.

தமிழ்ப் பள்ளி கலை நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் திருமதி. அனிதா தங்கமணி ஏற்பாடுகளைச் செய்திருந்தார். திருமதி. தீபா சிவகுமார் புகைப்படம் எடுக்க, பள்ளி முதல்வர் திருமதி. சுந்தரி குமார், துணைமுதல்வர் திரு. ராஜா வேணுகோபால் மேற்பார்வை செய்தனர்.

ராஜி முத்து,
ஆல்ஃபரட்டா

© TamilOnline.com