சிவ-முருகன் கோவிலுக்காக ஸ்ருதி ஸ்வர லயா நிகழ்ச்சி
ஃபிப்ரவரி 6, 2011 அன்று மாலை 4.00 மணிக்கு சிவ-முருகன் கோவிலுக்கு நிதி திரட்டுவதற்காக 'ஸ்ருதி ஸ்வர லயா' இசைப்பள்ளி பாலோ ஆல்டோவின் கபர்லி அரங்கத்தில் ஒரு கலைநிகழ்ச்சியை வழங்க இருக்கிறார்கள். இதற்கு சத்குரு வித்யாலயா மாணவர்கள் வயலினும், சர்வலகு பெர்குஷன் சென்டர் மாணவர்கள் மிருந்தங்கமும் வாசிக்க உள்ளனர்.

ஃப்ரீமாண்ட் பகுதியில் தென்னிந்திய இசை கற்பித்து வரும் ஸ்ருதி ஸ்வர லயா இசைப்பள்ளி இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சிவ-முருகன் கோவிலுக்கு நிதி திரட்டும் பணியில் உதவி செய்து வருகிறது.

இணையதளம்: www.shruthiswaralaya.com

நுழைவுச்சீட்டு: நபருக்கு $10.
தொடர்பு கொள்ள: தொலைபேசி: 510.490.4629

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com