நீண்ட இடைவேளைக்குப் பிறகு தமிழ்ப் படப்பிடிப்பு இலங்கை மண்ணில், அதுவும் தமிழர் வாழும் பகுதியில் நடைபெற்று வருவது, ஆச்சரியமான ஆனால் உண்மையான தகவல்.
'கனவுகள் நிஜமானால்', 'மாநு' என்ற இரண்டு குறும்படங்களை இயக்கிய இலங்கைத் தமிழர் ஆர். புதியவனின் இயக்கத்தில் உருவாகிவரும் படம் 'மண்'. சுமார் 25 வருடங்களுக்கு பிறகு இலங்கையில் தமிழர் வாழும் பகுதியில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
நாயகனாக விஜித்தும், நாயகியாக ஷனா நடிக்கிறார்கள். இருவருமே புதுமுகங்கள். இதில் சிங்கள நடிக, நடிகையரும் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்.எல். பாலாஜி பாடல்களை எழுத, சி.கே. ராஜ்குமார் ஒளிப்பதிவைக் கவனிக்கிறார். இசை ஜெர்மன் விஜய். இலங்கையில் சிங்களப் படங்களை விநியோகம் செய்யும் ராஜ் கஜேந்திரா இப்படத்தைத் தயாரிக்கிறார்.
'மண்' இலங்கை வன்னிப் பகுதியில் நடக்கின்ற ஒரு கிராமத்துக் கதையாம்.
கேடிஸ்ரீ |