நல்ல தம்பி


பணக்காரப் பெண்ணைக் காதலிக்கும் நாயகன், அவளைத் திருமணம் செய்ய திட்டமிடுகிறான். திருமண நாள் நெருங்கும்போது நாயகி, மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறாள். கொலை செய்தது யார், ஏன் என்பதைக் கதையாகக் கொண்டது நல்ல தம்பி. லலிதா மூவிமேக்கர்ஸ் சார்பில் முற்றிலும் புதுமுகங்களை கொண்டு உருவாகி வரும் இந்தப் படத்தில் புதுமுகங்கள் விஸ்வாஸ்-சோனு சந்திரபால் ஆகியோர் நாயக, நாயகியாக நடிக்கின்றனர். திடுக்கிடும் சம்பவங்களைக் கொண்டு விறுவிறுப்பாகத் தயாராகி வருகிறது. அறிமுக இயக்குனர் சண்முக சீனிவாஸ் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார். இசை: விசு-சுப்பு.

அரவிந்த்

© TamilOnline.com