நர்த்தகி


திருநங்கைகளின் அவல வாழ்க்கையைக் கூற வருகிறது நர்த்தகி. திருநங்கை 'கல்கி' இதில் நாயகியாக நடிக்கிறார். அவருக்கு பரத நாட்டியக் கலைஞர் வேடம். இதுவரை யாரும் இப்படி ஒரு படத்தை எடுத்ததில்லை. திருநங்கைகளின் வாழ்க்கை முறையையும், யாரும் அறியாத அவர்களது மறு பக்கத்தையும் இப் படத்தில் காட்டியிருக்கிறேன். இதில் 100 திருமங்கைகள் நடித்திருக்கிறார்கள்" என்கிறார் இதை இயக்கும் விஜயபத்மா. இசை, ஜி.வி. பிரகாஷ். பாடல்கள், நா.முத்துகுமார். படத்தைத் தயாரிப்பவர் 'புன்னகைப் பூ' படத்தைத் தந்த கீதா.

அரவிந்த்

© TamilOnline.com