குறுக்காக:
3. எதிர் மழை வரும் முன் அரங்கத்தில் முதல்வனாய் ஏறு (3)
5. இதையெழுதிய பின் கடிதத்தில் ஆவல் வரும் (5)
6. கலை எண்ணம் இடையொடிந்தது (2)
7. ஒரு ராகம் தொடங்கு, ... ம் வேண்டாம் (3)
8. ஏழாண்டுப் போரை ஐரோப்பியர்கள் இங்கேயும் நடத்தினர் (5)
11. அழகியின் தலைக்கருகில் தலையை வைத்த கவனக்குறைவு (5)
12. பல்லிருக்கும், நாவிருக்காது; பழமிருக்கும், பூவிருக்காது (3)
14. நுழையா அம்பு காலுக்குள் பாய்ந்தது (2)
16. சுற்றிவர வடமிட்ட குளறுபடி (5)
17. முன்பு ஊஞ்சலென விளையாடிய சுமை தாங்கி (3)
நெடுக்காக:
1. உதாரணமாகச் சென்னையிலிருப்பவன் மார்கழி தொடங்கி அசைய வாத்தியத்தை
இசை (6)
2. அறிவைக் கேட்பதற்குக் காலம் கடத்து? (3)
3. களைப்பில் ஆழ்ந்து அந்தி முடியாமல் துயர் உலுக்கியது (5)
4. 1 இன் எல்லைகளில் ஒரு மாதம் (2)
9. இடுப்பணி வலி மிகுந்து ஓவியம் தொடர்ந்த அச்சு (6)
10. நாள்களில் தசமி, படிப்பில் பரீட்சை பயமுறுத்தும் வருடம் (5)
13. ஒரு கதவு உரச சாவைத் தவிர்த்த பல்லி (3)
15. முடியாததெனினும் ஒரு நதியை ரிஷி விரும்புவார் (2)
வாஞ்சிநாதன்
ஜனவரி 2011 புதிர் விடைகள்
குறுக்காக: 5. பதி 6. ரகுவம்சம் 7. எரியாத
8. ஊன்று 9. சிகாகோ 11. குமரி
13. பாதகம் 16. ஒலிபெருக்கி 17. மடி
நெடுக்காக: 1. அதிகரி 2. திரயோதசி 3. குவளை 4. கீசகன் 10. கோபாக்கினி 12. மல்லிகை
14. கண்மணி 15. நெருடு
ஜனவரி 2011 புதிர் மன்னர்/அரசிகள்
யோகநந்தினி, சன்னிவேல், கலி
அம்ருதா பார்த்தசாரதி, அரும்பாக்கம், சென்னை
சுரேஷ் கிருஷ்ணமூர்த்தி, சான் ஹோசே, கலி.