மிச்சிகன் தமிழ் சங்கம் தீபத் திருவிழா
நவம்பர் 13, 2010 அன்று மிச்சிகன் தமிழ் சங்கத்தின் தீபாவளிக் கொண்டாட்டமான 'தீபத்திருவிழா' ட்ராய் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. சங்கத்தின் தமிழ்ப் பள்ளியில் பயிலும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் "நிலா நிலா ஓடிவா" என்ற பாடலுடன் தொடங்கிய விழாவில், சன் தொலைகாட்சியில் தீபாவளி தினத்தன்று ஒளிபரப்பான சிறப்பு தீபாவளிப் பாடலைப் பாடியது மிக அருமை.

எந்திரனாய் வந்த குழந்தைகள் போட்ட ஆட்டத்தி?ற்கு, பள்ளி நிர்வாகிகளான அமெரிக்கர்களும் நடனம் ஆடியது எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியது. பரதநாட்டியத்தின் அலாரிப்புக்கு ஆடிய குமரியரை அரங்கம் கரவொலி எழுப்பிப் பாராட்டியது.

ஒரு விளையாட்டு தேதி, தீபாஞ்சலி, பஞ்சதந்திரக் கதை, அழகிய தமிழ்ச் சிங்கங்கள், விளக்கு வைப்போம், சம்திங் சம்திங், என்னுள்ளே என்னுள்ளே என்று அடுக்கடுக்கான வண்ணமயமான கலை நிகழச்சிகள் நடேந்தேறின. கலக்கல் கொண்டாட்டத்தில் நடனமாடிய "யூத்" குழுவினரின் சிறப்பு நடனத்தைத் தொடர்ந்து பிரபல திரைப்பட நடிகை ஜெயஸ்ரீ நடத்திய "மிச்சிகன் சூப்பர் ஜோடி" நிகழ்ச்சியி நவரச விருந்து வழங்கிய ஜோடிகளைப் பாராட்டாதவர் இல்லை.

"D.J" நிகழ்ச்சியில் நானுற்றுக்கும் மேலானோர் நடனமாடினர். வருகிற ஜனவரி 29, 2011 அன்று நோவை மேல்நிலைப் பள்ளியில் 'தித்திக்கும் தை' திருவிழா நடைபெறும் என்ற அறிவிப்போடு விழா முடிவுற்றது.

பால்ராஜ்,
மிச்சிகன்.

© TamilOnline.com