மூலக்கடை முருகன்


சண்டைக் காட்சிகள் இயக்குனர் தவசிராஜ் இயக்குனராக அறிமுகமாகும் படம் மூலக்கடை முருகன். அதிரடியான ஆக்‌ஷன் படமான இதில் இரண்டு தாதா கோஷ்டிகளுக்கு இடையே நடக்கும் ஈகோ மோதலை விறுவிறுப்பான பயங்கர சண்டைக் காட்சிகளுடன் படமாக்கியுள்ளனர். மூலக்கடையில் பதினைந்து வருடங்களுக்கு முன்னால் நடந்த உண்மைச் சம்பவம்தான் மூலக்கடை முருகனாம். கதாநாயகனாக புதுமுகம் மதனும், நாயகியாக அனீஷிபாவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் டாக்டர் எஸ். சீனிவாசன், ரவிமரியா, காதல் தண்டபாணி, சீதா, புவனா, சங்கர் குரு ராஜா, தேவிகா, மலேசியா ஜெனிபர் ஆகியோரும் நடிக்கின்றனர். பாடல்களை வாலி, சினேகன், யுகபாரதி, பாலபாரதி ஆகியோர் எழுதியுள்ளனர்.

அரவிந்த்

© TamilOnline.com