புதிய தளபதி


பணத்திற்காக எதையும் செய்யும் தாதா ஒருவன் வக்கீலுக்குப் படித்த பெண்ணை திருமணம் செய்து கொள்கிறான். அவள், அவனைக் கொஞ்சம் கொஞ்சமாகத் திருத்துகிறாள். மனம் திருந்திய அவன் மகாத்மா என்னும் புதிய கட்சியை ஆரம்பிக்கிறான். அதன் காரணமாக பல எதிர்ப்புகளைச் சந்திக்கிறான். அதை எப்படிச் சமாளித்து வாழ்க்கையில் வெற்றி பெறுகிறான் என்பது படத்தின் கதை. தெலுங்கு ஹீரோ ஸ்ரீகாந்த் கதாநாயகன். பாவனா, ஷார்மி ஆகியோர் நாயகிகள். தெலுங்கின் வெற்றிப் பட இயக்குநர் கிருஷ்ண வம்சி இயக்குகிறார். இசை: விஜய் ஆன்டனி.

அரவிந்த்

© TamilOnline.com