1. ஒன்று விட்டு ஒன்றாக உள்ள ஐந்து வீட்டுக் கதவு இலக்கங்களின் கூட்டுத் தொகை 675 என்றால் அந்த எண்கள் யாவை?
2. 25, 81, 169, ... - அடுத்து வரக் கூடிய எண் எது? ஏன்?
3. A என்பவர் Bயின் மகள். B, C இருவரும் சகோதரிகள். C யின் தாய் D ஆவாள். Dயின் மகன் E. Eயின் மகன் X. என்றால் X க்கு A என்ன உறவு?
அரவிந்த்
விடைகள்1. விடை காண n / 5 - 2^2 என்ற சூத்திரத்தைப் பயன்படுத்தவும்.
n = 675. 2 ^ 2 = 2 X 2 = 4.
675 / 5 = 135 - 4 = 131.
வீட்டின் கதவு எண்கள் முறையே 131, 133, 135, 137, 139.
2. அடுத்துவரக் கூடிய எண் 289. முதல் எண் ஐந்தின் வர்க்கமாகும் (5x5 = 25). அடுத்த எண் 5+4=9 என்பதன் வர்க்கமாகும் (9x9=81). அடுத்த எண் 9+4=13 என்ற எண்ணின் வர்க்கமாகும். (13x13=169). ஆகவே அடுத்து வரக்கூடிய எண். (13+ 4) 17 என்பதன் வர்க்கமான (17x17) 289.
3. அத்தை மகள் ஆக வேண்டும். D என்பவர் B, C, E மூவருக்குமே தாயாக இருக்கிறாள். B, C இருவரும் பெண்கள், சகோதரிகள். E அவர்களின் சகோதரன். எனவே Bயின் மகளான Aவிற்கு E தாய்மாமா. ஆக அவரது மகனான Xற்கு A அத்தை மகளாகிறாள்.