வாசிக்காதே, வேண்டாம்!
கிளாரிநெட் எவரெஸ்ட் என்று போற்றப்பட்டவர் ஏ.கே.சி. நடராஜன். அயல்நாட்டு வாத்தியமான கிளாரிநெட்டில் கர்நாடக சங்கீதம் வாசித்தவர். ஒருமுறை அவர் கேரளத்திலுள்ள கோட்டயம் கோயிலில் கச்சேரிக்குச் சென்றிருந்தார். திடீரென ஊரார் சிலர் திரண்டு வந்து, வெளிநாட்டுக் கிளாரிநெட் வாசித்தால் அது கர்நாடக இசைக்குக் கேடு என்று எதிர்த்தனர். ஏ.கே.சி.யை அழைத்து வந்தவர் எதிர்ப்பாளர்களிடம், "கச்சேரியைக் கேட்காமலேயே எப்படி நீங்கள் முடிவு செய்யலாம்? சிறிது நேரம் கேட்போம். பிடிக்கவில்லை என்றால் திருப்பி அனுப்பி விடலாம்" என்று கூறிவிட்டு, ஏ.கே.சி.யை வாசிக்கச் சொன்னார். மூன்று மணி நேரம் போயே போனது! கூட்டத்தவர்கள் கிளாரிநெட் இசையில் மனதைப் பறிகொடுத்துத் தங்களை மறந்து அமர்ந்திருந்தார்கள். அதுமுதல் வருடா வருடம் கோட்டயம் கோயிலுக்கு வந்து கிளாரிநெட் வாசிக்க வேண்டி வந்தது நடராஜனுக்கு.



© TamilOnline.com