பொடியும் அரியக்குடியும்
அரியக்குடி ராமானுஜ ஐயங்காருக்கு கச்சேரியின் நடுநடுவே பொடி போட்டுக் கொள்வது வழக்கம். ஒருமுறை திருச்சியில் கச்சேரி. முன் வரிசையில் அமர்ந்திருந்த இருவர், ஐயங்கார் எத்தனை தடவை பொடி போடுகிறார் என்பதை எண்ணி, தங்களுக்குள் பேசிச் சிரித்துக் கொண்டிருந்தனர். ஐயங்கார் இதை கவனித்து விட்டார்.

சிறிது நேரம் சென்றது. திடீரென கச்சேரியை நிறுத்திப் பொடி டப்பியைத் திறந்த ஐயங்கார், "எல்லாரும் நன்னா பார்த்துக்கங்கோ. இதுவரை எண்ணாதவா நன்னா எண்ணிக்கோங்கோ. எட்டாவது தடவையாப் பொடி போடறேன் நான்" என்றார் குறும்புச் சிரிப்புடன்.

கச்சேரியை ரசிப்பதை விட்டு விட்டு அவர் பொடி போடுவதையே எண்ணிக் கொண்டிருந்த அந்த இரு ரசிகர்களும் என்ன பதில் சொல்வதென்று சொல்ல முடியாமல் விழித்தனர். சபையோ ஐயங்காரின் நகைச்சுவைக்கு ஆர்ப்பரித்தது.

© TamilOnline.com