ரொம்பப் பெருமையா இருக்கு டாக்டர்!
எனக்கு 54 வயதில் இதயத்தில் பைபாஸ் சர்ஜரி நடந்தது. ஆஞ்சியோ முடிந்த பிறகு என்னையும், என் மனைவியையும் டாக்டர் உள்ளே அழைத்தார். எனக்கு ஏழு பிளாக்குகள் உள்ளது என்றும், அதுவும் ஒவ்வொன்றும் 95%, 92%, 90%, 88%, 85%, 76%, 72% என்றும் அடுக்கினார். அதைக் கேட்ட நான் "எனக்கு ரொம்பப் பெருமையாக இருக்கு டாக்டர்" என்று சொன்னேன்.

உடனே டாக்டர் என் மனைவியிடம், "என்ன, நான் மிகவும் சீரியஸாகப் பேசிக்கிட்ருக்கேன். இவர் விளையாட்டுத்தனமாய் இருக்கிறாரே!" என்றார்.

உடனே நான், "இல்லை டாக்டர். நான் படிக்கும்போது கூட வரிசையா இத்தனை பர்சண்டேஜ் பார்த்ததில்லை. என்னுடைய இதயத்திலாவது இருக்கிறதே என்ற சந்தோஷம்தான்" என்றேன்.

ராஜா ராகவன்,
கலிபோனியா

© TamilOnline.com