தெரியுமா?: டிஷ் நெட்வர்க்கில் 'கலைஞர்', 'சிரிப்பொலி'
தமிழ் சேனல்களான 'கலைஞர்', சிரிப்பொலி' ஆகியவற்றை நவம்பர் 17, 2010 முதல் டிஷ் நெட்வர்க் வழங்குகிறது. இதன்மூலம் அமெரிக்காவில் முதலில் இவற்றை வழங்கும் தொலைக்காட்சி வலை நிறுவனமாகிறது டிஷ்நெட்வர்க். தவிர, 'TV9 கன்னடா' என்ற கன்னட சேனல் ஒன்றையும் புதிதாக வழங்குகிறது. "இவற்றை அறிமுகப்படுத்துவதன் மூலம் டிஷ், மிகச் சிறந்த இந்திய தொலைக்காட்சிகளை அமெரிக்காவில் தருவதற்கான தனது ஈடுபாட்டை உறுதிப்படுத்தியுள்ளது" என்கிறார் பன்னாட்டு நிகழ்ச்சிகளுக்கான துணைத்தலைவர் கிறிஸ் குவெலிங். இவ்விரண்டு தமிழ் சேனல்களையும் 'தமிழ் மெகா பேக்'கில் மாதம் $29.99 செலுத்திப் பெறலாம்.

மேலும் அறிய:
தொலைபேசி: 1-888-242-1865
இணையதளம்: www.dishnetwork.com

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com