அட்லாண்டா தமிழ் சபையில் கிறிஸ்து பிறப்பு
கிறிஸ்துமஸ் என்றாலே உலகெங்கிலும் விழாக் கோலம், அலங்காரம், பரிசுப் பொருட்கள் பரிமாறுவது. அட்லாண்டா தமிழ் சபை மக்கள் கிறிஸ்துமஸ் விழா நிகழ்ச்சிகளைத் தங்கள் ஆலயத்தில் கோலாகலமாகக் கொண்டாட திட்டமிட்டுள்ளனர். நவம்பர் 27ம் தேதி சனிக்கிழமை தொடங்கி நன்றியறிதலின் (Thanksgiving) நாட்கள் முடிந்தவுடன் ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மாலை நேரத்தில் வீடு வீடாகப் போய் சபை போதகர் பால்மர் பரமதாஸ் அவர்களும் சபையாரும் கிறிஸ்துமஸ் துதிப்பாடல்களைப் (சிலீக்ஷீவீstனீணீs சிணீக்ஷீஷீறீs) பாடி, கிறிஸ்து பிறப்பின் நற்செய்திகளைக் கூறி உற்சாகப்படுத்துவார்கள்.

டிசம்பர் 12 அன்று காலை 10:00 மணிக்கு, குடும்பம் குடும்பமாக ஆலயத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் பக்தி பாடல்களைப் பாடி இறைவனைப் போற்றுவதான Family Sing Song Service நடைபெறும். அட்லாண்டா தமிழ் சபையின் ஞாயிறு பள்ளி மாணவர்களின் தாலந்துகளையும் திறமைகளையும் வெளிக்கொண்டு வரும் நோக்கோடு கலைநிகழ்ச்சியை (Christmas Children Program) டிசம்பர் 19, ஞாயிறு காலை 10:00 மணிக்கு நடைபெறும். நிகழ்ச்சியின் முடிவில் கிறிஸ்துமஸ் தாத்தா சிறு பிள்ளைகளுக்கு வெகுமதிகளை அளிப்பார்.

நிகழ்ச்சிகளின் உச்சக்கட்டமாக டிசம்பர் 25ம் தேதி சனிக்கிழமை காலை 10:00 மணிக்கு கிறிஸ்துமஸ் ஆராதனை (Christmas Service) நடைபெறும். அதில் போதகர் பால்மர் பரமதாஸ் விசேச செய்தி அளிப்பார்கள். பாடல்குழுவினர் சிறப்புப் பாடல்களைப் பாடி சபையினரை கிறிஸ்துமஸ் நாளின் அதிசய உணர்வுகளுக்குள் அழைத்துச் செல்லுவார்கள். மத்தியானம் கிறிஸ்துமஸ் விருந்து வழங்கப்படும்.

டிசம்பர் 31ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 10:30 மணிக்கு விசேசித்த காத்திருப்பு ஆராதனை (Watchnight Service) நடைபெறும். கடந்த வருடம் பூராவும் காத்த தேவனுக்கு வருடத்தின் கடைசியில் நன்றி செலுத்திவிட்டுப் புது வருடத்தை தேவனுடைய சந்நிதியில் தொடங்குவதே இந்த ஆராதனையின் நோக்கம்.

எல்லா நிகழ்ச்சிகளுக்கும் குடும்பத்தினரோடு வந்திருந்து ஆனந்தமும் ஆசிர்வாதமும் பெறுங்கள். நீங்கள் அட்லாண்டா மாநகரில் வசிப்பவரானால், சிறப்புப் பாடல் குழுவினரை உங்கள் இல்லத்துக்கு அழைக்கவும், சிறுவர் கலைநிகழ்ச்சிகளில் உங்கள் வீட்டுப் பிள்ளைகள் பங்கேற்கவும், சபை போதகருடன் pastor@atlantatamilchurch.org என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.

மேலும் விபரங்களை அறிய: atlantatamilchurch.org

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com