மார்ச் 2006 - குறுக்கெழுத்துப் புதிர்
குறுக்காக

1 & 4 குறு. பாதி உறவு, சேலையோரம், நடுவே பேச்சில் தடுமாறு, எல்லாம் சாப்பாட்டின்மேல் ஆசையால் (5, 3)
6. இசைக்கு ஆதாரம் முதலில் சுத்த காந்தாரம், இரண்டாவதாக சாருகேசி, இறுதியாக மத்யமாவதி (3)
7. உணவின் பதம் மனத்தின் முதிர்ச்சி (5)
8. புதுப்பெண் தொடக்கத்தில் வெட்கத்தில் கடிப்பது வேறுவிதமாய் உண்மையெனக் கொள்க (4)
9. நாம் மறைத்த வஞ்சகவகை பேச்சுத் திறன் (4)
12. வாலில்லா வினயம் வால் ஒட்டி வால் நட்சத்திரத்தை ஆராயும் துறை (5)
14. கொதிக்கும் தண்ணீரில் சமைத்த ஐந்தறைப்பெட்டிவாசி முழுதாக இல்லை (3)
16. தசரதன் குலம் மாற கடைசியாகத் திருமால் தொண்டையில் உருவானது (3)
17. பெருமையிலா மாயாவி ரம்பா நடனத்தால் பணம் சம்பாதிக்க ஒரு வழி (5)

நெடுக்காக

1. பெண்மாடு வடநாட்டு ஆண்மாட்டின் தலை விழுங்கியதைப் பாராட்டித் தரப்படுவது (3)
2. ஒரு சுவை கள்ளை விலக்கி, மதித்து, மைசூர் ஆண்டவர் (5)
3. கீழிறங்கும் பல்லக்கில் வந்த கூட்டம் (4)
4. குறையில்லாத அரை குறை நீருள் செல் (3)
5. ம்! புதிரும் குழப்பத்தில் திசைமாறும்! (5)
8. தேர்தலில் நிற்போர் வேண்டுவதற்கு முன் பாதி நடனம் நடத்திக் காட்டு (5)
10. சமையற்காரன் கதை சொல்லும் பழந்தமிழ் நூல், பாதி வெள்ளம் விழுங்கிய தோழா! (5)
11. கச்சேரியில் மீண்டும் மீண்டும் பாடப்படுவது (4)
13. அல்லி இடைக்கு மேல் எதிர்ச்செல்லும் பஞ்சாப் நதி மீன் (3)
15. யாரினி இல்லையென்றாலும் தனியாரிடம் போகும் பாதை (3)

vanchinathan@gmail.com

© TamilOnline.com