இந்தப் படத்தில் பெண்களே இல்லை!
தமிழில் எப்போதாவது வித்தியாசமான படங்கள் வருவதுண்டு. 'அந்த நாள்' தொடங்கி 'தசாவதாரம்', சமீபத்திய எந்திரன் உட்பட பல படங்களை உதாரணமாகச் சொல்லலாம். அந்த வகையில் கதாநாயகி இல்லாமல் உருவாகிக் கொண்டிருக்கிறது ஒரு புதியபடம். கதாநாயகி மட்டுமல்ல; பெண்களே இப்படத்தில் இல்லையாம். கதாநாயகனும் இல்லையாம். முற்றிலும் ஆண்கள் மட்டுமே இப்படத்தில் நடிக்க இருக்கிறார்கள். சாய்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவருடன் ஆசிஷ் வித்யார்த்தி, காதல் தண்டபாணி எனப் பலர் நடிக்க இருக்கின்றனர். படத்தை இயக்குகிறார் ரமணா.

அரவிந்த்

© TamilOnline.com