நிர்மல் ஷா கதாநாயகனாக அறிமுகமாகும் படம் பாலு தம்பி மனசிலே. ஸ்ருதிகா கதாநாயகியாக நடிக்கிறார். சுந்தர்ராஜன், ஆதவன், நம்பிராஜன் உள்ளிட்ட பலர் முக்கியப் பாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஜமீன்ராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். மனதளவில் பக்குவம் அடையாத தம்பி, அவனையே உலகம் என்று நினைத்து அவனுக்காகவே வாழும் பாசமும், தியாகமும் நிறைந்த அண்ணன், இவர்களைப் பற்றியதுதான் படம் என்கிறார் இயக்குனர். இசை - தேவேந்திரன்; பாடல்களை பா. விஜய், ஜமீன்ராஜ் எழுதியுள்ளனர். சென்னை மாநகர கூடுதல் ஆணையாளர் எம். ரவி இப்படத்தில் ஒரு பாடலை எழுதியிருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.
அரவிந்த் |