சுல்தானை இயக்கும் கே. எஸ். ரவிகுமார்


சவுந்தர்யா இயக்கி ரஜினியைக் கதாநாயகனாகக் கொண்ட சுல்தான் தி வாரியர் கார்ட்டூன் படத்தை இனி கே.எஸ். ரவிகுமார் இயக்க இருக்கிறார். முதலில் ரஜினியை வைத்து அனிமேஷன் படமாக உருவாக்கப்பட்ட இதில், தற்போது கூடுதலாக சிறப்புக் கதாபாத்திரத்தில் ரஜினியே நடிக்க இருக்கிறார். இதுவரை எடுக்கப்பட்ட அனிமேஷன்களைப் பயன்படுத்திக் கொள்வதுடன், ஒரிஜனல் ரஜினியையும் பயன்படுத்தி, சிறந்த கமர்ஷியல் படமாக சுல்தானை உருவாக்க இருக்கிறார் ரவிகுமார். அவர் இயக்கும் 'மன்மதன் அம்பு' படம் முடிந்து விட்டதால், அடுத்து சுல்தானைக் கையில் எடுக்க இருக்கிறார். படத்தின் பெயரை 'ஹரா' என்று மாற்றியிருக்கிறார்கள்.

அரவிந்த்

© TamilOnline.com