மீண்டும் பா. விஜய்


'ஞாபகங்கள்' படத்தில் நடித்த கவிஞர் பா. விஜய் தற்போது 'இளைஞன்' படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். கதை, திரைக்கதை, வசனம் கலைஞர் கருணாநிதி. இயக்கம் சுரேஷ் கிருஷ்ணா. 50 ஆண்டுகளுக்கு முந்தைய கதை என்பதால் அதற்கேற்றவாறு வசனம், பாடல் காட்சிகள், ஆடைகள் வடிவமைக்கப் பட்டுள்ளன. வித்தியாசமான வில்லி வேடத்தில் நடிக்கிறார் நமீதா. குஷ்பு, ரம்யா நம்பீசன், நாசர், மீரா ஜாஸ்மின், வடிவேலு, சுமன் என்று பல பிரபலங்களும் படத்தில் தலைகாட்டுகின்றனர். இந்தப் படத்தில் சிம்பொனியுடன் இந்திய இசையைக் கலந்து கொடுத்திருக்கிறார் வித்யாசாகர். மிகப்பெரிய கப்பல் செட் போட்டு 100 நாள் படப்பிட்ப்பு நடந்திருக்கிறது. இது கலைஞரின் கதை-வசனத்தில் உருவாகும் 75வதுபடம்; சுரேஷ் கிருஷ்ணாவுக்கு 50வது படம் என்பவை சுவையான புள்ளிவிவரங்கள்.

அரவிந்த்

© TamilOnline.com