விக்ரம் நடிக்கும் 'தெய்வ மகன்'


மதராசப்பட்டினம் வெற்றிப் படத்தைத் தொடர்ந்து விஜய் இயக்கும் படம் தெய்வ மகன். இதில் விக்ரம் கதாநாயகன், அனுஷ்கா நாயகி. ஏழு வயது மகளை மீட்கப் போராடும் மனநிலை பாதிக்கப்பட்டவராக விக்ரம் நடிக்க, அவருக்கு உதவும் வக்கீலாக அனுஷ்கா இதில் நடிக்கிறார். இசை ஜி.வி. பிரகாஷ்குமார். 2001ல் வெளியான 'ஐயாம் ஸாம்' என்ற ஹாலிவுட் படத்தின் தழுவல் இப்படம் என்கிறது ஒரு கோடம்பாக்கம் குருவி.

அரவிந்த்

© TamilOnline.com