தேவையான பொருட்கள்: டொமேடிலோ (பொடியாக நறுக்கியது) -3 சௌசௌ (பெங்களூர் கத்தரிக்காய்) சிறு துண்டுகளாக நறுக்கியது -2 இஞ்சித் துருவல் - 1 தேக்கரண்டி பெருங்காயப்பொடி - 1 தேக்கரண்டி உளுத்தம்பருப்பு - 2 மேசைக்கரண்டி பச்சைமிளகாய் - தேவைக்கேற்ப உப்பு - தேவைக்கேற்ப தேங்காய்த் துருவல் - 1 மேசைக்கரண்டி சமையல் எண்ணெய் -1 தேக்கரண்டி
செய்முறை: வாணலியில் கொஞ்சமாக எண்ணெய் ஊற்றி, அதில் உளுத்தம்பருப்பு, பெருங்காயம், பச்சைமிளகாய் போட்டுப் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். இதைத் தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.
மீதி எண்ணையில் நறுக்கிய டொமேடிலோ, சௌசௌவை நன்றாக வதக்கிக் கொள்ளவும். காய்கள் ஆறியபின் மிக்ஸியில் போட்டு தேங்காய்த் துருவல், வதக்கிய பச்சைமிளகாய், உப்பு, இஞ்சித் துருவல் சேர்த்து, தண்ணீர் ஊற்றி அரைக்கவும். சற்று அரைந்ததும், வறுத்த உளுத்தம்பருப்பை அதில் போட்டு நறநற என்று அரைத்துக் கொள்ளவும். டோமோடிலோ சௌசௌ துவையல் தயார். சாதத்தில் கலந்து சாப்பிடலாம். தோசை, சப்பாத்தி, பொங்கல் போன்றவற்றுக்குத் தொட்டுக்கொள்ளலாம்.
பிரேமா நாராயணன், கேன்டன், மிச்சிகன் |