டிசம்பர் 2010: தென்றல் குறுக்கெழுத்துப் புதிர்
சென்ற மாதப் புதிர்க் குறிப்பொன்றுக்கு "அம்பாலிகா" என்ற விடை மகாபாரதக் கதையுடன் ஒத்துப் போகவில்லை என்று சன்னிவேல் கிருஷ்ணமூர்த்தி, சின்சினாட்டி வைத்தியநாதன் இருவரும் சுட்டிக் காட்டியுள்ளனர். நன்றி. அந்த உளறலைத் தவிரக் குறள் வடிவக் குறிப்பும் இருந்தது பிடித்ததாக எவரும் சொல்லவில்லையென்றாலும், அப்படி நினைத்துக் கொண்டு இன்னமும் சில வெண்பாக்களை அறிமுகப்படுத்துகிறேன்! ஏற்கனவே இப்புதிர்ப் பக்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இலவசக் கொத்தனாரின் வலைப்பதிவிற்குச் சென்று பாருங்கள்

குறுக்காக:
3. நாதியற்ற கணையோ? (3)
5. எப்போதோ உடுத்திய ஆடை கனி, அஞ்சாதே (5)
6. கோடு இழு, துண்டாக்குவதற்கா? (2)
7. வாலறுந்த குதிரையிடமும் போட்டியில் கலந்து கொள்ளும் அருகதை யிருக்கிறது (3)
8. ஒளிய வேண்டாம் பதற்றம் தொடங்கினாலும் படபடத்துத் தேங்காது (5)
11. சன்னதி தேவியையா சிகண்டிக்கு முற்பட்டவள் வாளையால் வாலறுத்தாள்? (5)
12. பாவம், இனிமை ஒன்றிரண்டு குறைந்த ராகம் (3)
14. புதிய பத்துக்குக் குறைவானது (2)
16. மனஸ்தாபத்திற்குப் பின் சமரசம் கோபுரம் தலை சாய்ந்த ஊர் (5)
17. ஜாங்கிரி, ஜாங்கிரி என்று ஜபித்தால் தாட்சாயணி தோன்றுவாள் (3)

நெடுக்காக:
1. ஒரு காரியம் தொடங்கும் போது தீமை பயக்கும் மூட நம்பிக்கை (6)
2. ரிஷி பத்தினி சம்ஸ்கிருத மரம் வெட்டி மாலை செய்வாள் (3)
3. ஆசிரியரின் பணியை அறிமுகப்படுத்த உடை உடுத்தி இறுதியாக உயிரை அளி (5)
4. இன்றைய அரசின் ஆணைப்படி புத்தாண்டிற்கு முன் இன்பத்தைத் துய்ப்பவன் (2)
9. காலன் இறுதியில் தோன்றவில்லையென்றாலும் எல்லை வந்து கெடு (6)
10. நாட்டை ஆளப்போகிறவர் நாட்டை அறிந்த பிரமுகர்தான் (5)
13. மன்னர் பாபரை ஆண்டவன் எனும் ஊர் (3)
15. மெய்மறந்து நிதி நிறுவனத்தின் பொறுப்பை ஏற்றுக்கொள் (2)

வாஞ்சிநாதன்

நவம்பர் 2010 விடைகள்

© TamilOnline.com