சான் டியேகோ தமிழ்ச் சங்கம்: தீபாவளி
அக்டோபர் 30, 2020 அன்று சான் டியேகோ தமிழ்ச் சங்கம் தீபாவளி விழா கொண்டாடியது. அதில் திரட்டப்பட்ட நிதி Chid Rights and You தொண்டு நிறுவனதிற்கு வழங்கப்பட்டது.

இளையராகம் இசைக்குழுவினரின் 'எங்கேயும் எப்போதும்' என்ற இன்னிசை நிகழ்ச்சியை சான் டியேகோ பல்கலைக்கழக வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்தது. தமிழ்த் திரையிசை உலகத்தின் முப்பெரும் வேந்தர்களான M.S. விசுவநாதன், இளையராஜா, A.R. ரகுமான் ஆகியோர் இசையமைத்த சில பாடல்களைத் தெரிவுசெய்து, இளையராகம் குழுவினர் அற்புதமாக இசைத்து அசத்தினர். நானூறுக்கும் மேற்பட்டோர் இந்த இசைமழையில் குளித்தனர். இளையராகம் குழுவினரும் அங்குக் கிடைத்த ஒலிப்பேழை விற்பனை வருமானத்தை CRY-க்கு வழங்குவதாக அறிவித்தனர். நன்றி நவிலலுடன் விழா நிறைவு பெற்றது.

செய்திக் குறிப்பிலிருந்து

© TamilOnline.com