முதல்வர் மகாத்மா


உலகமே கொண்டாடும் மகாத்மா காந்தியின் அஹிம்சைக் கருத்துக்கள் நாட்டிற்கு என்றும் தேவை. முன் எப்போதையும் விட தற்போது உலகத்துக்கு காந்திஜி மிகவும் தேவைப்படுகிறார் என்பதை வலியுறுத்தி உருவாகி வரும் படம் முதல்வர் மகாத்மா. இப்போது காந்தி மீண்டும் வந்தால், நாட்டின் பிரச்னைகளை எப்படிக் கையாள்வார், சமுதாயம் அவரை எப்படி எதிர்கொள்ளும் என்பதுதான் படத்தின் கதை. காந்தியின் கொள்கைகளைப் பின்பற்றி ஆட்சி செய்யும் மாநில முதல்வராக ஹிந்தி நடிகர் அனுபம்கேர் நடிக்கிறார். நடிகை மான்வி பத்திரிகையாளராக நடிக்கிறார். 'காமராஜ்' படத்தில் காந்தி வேடமேற்று நடித்த கனகராஜ், காந்தியாக நடிக்கிறார். அப்படத்தை இயக்கிய பாலகிருஷ்ணனே இப்படத்தையும் இயக்குகிறார்.

அரவிந்த்

© TamilOnline.com