ரதம்
"ஆணுக்கும் பெண்ணுக்கு உள்ள நட்பை இன்றைக்கும் சமுதாயம் தவறாகத் தான் பார்க்கிறது. அந்த நட்பின் மேன்மையைச் சொல்ல வரும் படம்தான் ரதம்" என்கிறார் அதன் இயக்குனர் வியாஸ். கூத்துப்பட்டறை மாணவர் வினோத் கதாநாயகனாக நடிக்க, நாயகியாக வித்யா நடிக்கிறார். இவர்களுடன் தலைவாசல் விஜய், மன்சூர் அலிகான், நீலிமாராணி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இவர்களுடன் முக்கியப் பாத்திரமாக 'சைக்கிள்' ஒன்று நடிக்கிறது. எஸ்.எஸ். குமரன் இசையமைக்கிறார். கதை, திரைக்கதை வசனத்தையும் இயக்குனர் வியாஸே எழுதியிருக்கிறார்.

அரவிந்த்

© TamilOnline.com