ஈசல்
விஜய் ஆதித்யா விளம்பரப் பட இயக்குனர். இவர் இயக்குனராக அறிமுகமாகிறார் 'ஈசல்' படத்தில். நிச்சயம் இது ஒரு வித்தியாசமான படம் என்று கூறும் இயக்குனர் விஜய், "பத்து நண்பர்கள் ஒரே நேரத்தில் இறந்து போகிறார்கள். இறந்த சில நாட்களில் பத்து பேரும் உயிர்த்தெழுகிறார்கள். மீண்டும் உயிருடன் வரும் அந்த பத்து பேரும் செய்யும் சாகசங்கள்தான் படத்தின் கதை" என்கிறார். பத்து நண்பர்களும் ஏன் இறக்கிறார்கள், எப்படி உயிருடன் வருகிறார்கள்? அப்படி வந்து அவர்கள் சாதிக்கும் விஷயம் என்ன என்பதை மிக வித்தியாசமாகத் திரையில் காட்டியிருக்கிறேன் என்று கூறும் இயக்குனர், இப்படத்திற்காக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, குஜராத்தி, கொங்கணி என 24 மொழிகளில் வார்த்தைகளை பயன்படுத்தி, தேசப்பற்றை வெளிப்படுத்தும் பாடல் ஒன்றையும் உருவாக்கியிருக்கிறார். அதை 24 மொழிப் பாடகர்கள் பாடியிருப்பதுடன், அந்தந்த மொழிகள் பேசப்படும் பகுதிகளிலேயே படப்பிடிப்பும் நடைபெற்றுள்ளது. இது ஒரு கின்னஸ் சாதனை முயற்சி என்கிறது கோலிவுட் வட்டாரம்.அரவிந்த்

© TamilOnline.com